Saturday, May 15, 2004

தேர்தல் முடிவுகள் சொல்லும் உண்மைகள்

[தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த ஓரிரு மணி நேரத்தில் எழுதப்பட்டது இக்கட்டுரை. இருப்பினும் வெளியிடலாமா வேண்டாமா என்று சிந்தனைக்குப்பின் இன்று எந்தத் திருத்தமுமின்றி அப்படியே வெளியிடுகிறேன்]2004 தேர்தல் முடிவுகள் செல்லும் விதம் (trend) நமது அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இன்னும் ஏற்க மறுக்கும் சில உண்மைகளைத் திரும்ப நிலை நிறுத்துகின்றன. அவை.

1. தேசியப் பிரச்சினை தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில்லை. ‘இந்தியா ஒளிர்கிறது ‘ அல்லது ‘சோனியா வெளிநாட்டவர்’ என்ற வாதங்களைக் காது கொடுத்துக் கேட்க யாரும் தயாராக இல்லை.

2. மக்களின் அடிப்படைத் தேவைகளே (நீரும் மின்சாரமும்) இந்தத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயித்துள்ளன. அவற்றோடு மாநில அரசுகளின் மீது இயல்பாக ஏற்படும் எதிர்ப்பலை (Anti incumbency) சேர்ந்து கொண்டது
எ.கா சில பெரிய மாநிலங்கள்
1. தமிழ்நாடு – வறட்சி, அரசு ஊழியர்களின் பிரச்சினை
2. கேரளா – வறட்சி, ஆளுங்கட்சி உட்பூசல்கள்
3. ஆந்திரம் –வறட்சி, மின்சாரம்
4. கர்நாடகம் – வறட்சி
5. குஜராத் – விவசாயிகளின் பிரச்சினை
6. பஞ்சாப் - எதிர்ப்பலை, ஊழல் , உட்கட்சிப் பூசல்கள்
7.அரியானா- எதிர்ப்பலை, கூட்டணியின்மை
8.ஒரிஸ்ஸா-எதிர்ப்பலை(சரியான தலைவர்கள் இன்மையால் காங்கிரசால் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை),
9.அஸ்ஸாம்-எதிர்ப்பலை,
10. ஜார்க்கண்ட் – எதிர்ப்பலை
11. மகாராட்டிரம் – எதிர்ப்பலை ( காங்கிரஸ் பவாருடனான கூட்டணி காரணமாக தனது இடங்களின் எண்ணிக்கை அதிகம் குறையாமல் தப்பித்தது )

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்,இராஜஸ்தான் இவற்றில் மாற்று அரசு அமைந்து குறைந்த காலமே ஆகியிருப்பதால் இன்னும் எதிர்ப்பலை ஏற்படவில்லை.
இந்த சூழ்நிலையில்
1. தேசியக்கட்சி என்று மார்தட்டிக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை. ஏனெனில் இந்தியா முழுமைக்கும் எந்த ஒரு தனிக்கட்சிக்கும் செல்வாக்கில்லை. தேசியக்கட்சியாக இருந்த காங்கிரஸ் ஏறக்குறைய இந்தத் தகுதியை இழந்து வருகிறது
2. மாநிலங்களின் கூட்டாட்சி என்ற மாற்று அரசமைப்புக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது
3. சராசரி மனிதர்களின் (பெரும்பாலும் விவசாயிகளின்) வயிற்றிலடிக்கும் எந்த அரசும் மாற்றப்படும்
4. இடதுசாரிகள் மேற்குவங்கம், கேரளம் இரண்டிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இவர்களால் எத்தனை இடங்களைப் பெற முடியுமோ அதனை இத்தேர்தலில் பெற்று விடுவார்கள். எதிர்காலத்தில் தங்கள் கட்சிக்கு மேலும் நிறைய இடங்கள் வேண்டுமென நினைத்தால் , இவ்விரு மாநிலங்களுக்கு அப்பாலும் தங்கள் கட்சியை வளர்க்க வேண்டுமெனில் அவர்கள் மத்திய அரசில் பங்கேற்றால் தவிர வேறு வழியில்லை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home